ஜமுனாமரத்தூர் அருகே 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!

 
illicit arrack

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகே மதுவிலக்குப்பிரிவு போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் மற்றும் 60 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில், போளூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் ஆய்வாளர் புனிதா தலைமையிலான போலீசார், நேற்று  ஜமுனாமரத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேப்பிலி கிராமத்தில் உள்ள மிளகாய்நாஸ் ஓடை பகுதியில் மதுவிலக்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

illicit arrack

அப்போது, மிளகாய்நாஸ் ஓடை அருகே முட்புதரில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக 8  பேரல்களில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 60 லிட்டர் கள்ளச்சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது. 

தொடர்ந்து, 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் கள்ளச்சாராயத்தை மதுவிலக்குப்பிரிவு போலீசார் தரையில் கொட்டி அழித்தனர். மேலும், சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.