திருமணமாகாத விரக்தியில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை... ஆம்பூர் அருகே சோகம்!

 
fire

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே திருணமாகாத விரக்தியில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அசோக்ராஜ்(35). இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், அசோக் ராஜூக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் அமையவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த அசோக்ராஜ் வீட்டில் இருந்த பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.

ambur

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக  வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அசோக்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.