துணை வட்டார வளர்ச்சி அலுவலரை செருப்பால் அடித்த விவகாரம்... ஊராட்சி துணை தலைவர் கைது!

 
cuddalore

கடலூர் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தின்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலரை செருப்பால் அடித்த, ஊராட்சி மன்ற பெண் துணை தலைவர் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள கண்டமங்கலம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தையொட்டி, நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற கண்டமங்கலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா, அவரை செருப்பால் பின் பகுதியில் அடித்துள்ளார். இந்த சம்பவம் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

arrest

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சரண்யாவை, விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனுக்கும், ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யாவுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், போலீசார் சரண்யாவை கைது செய்தனர்.