பெரம்பலூர் அருகே நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

 
dead

பெரம்பலூர் அருகே உடல்நல குறைவால் நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. தொழிலாளி. இவருக்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி சங்கீதா (19) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது சங்கீதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சங்கீதாவுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

perambalur gh

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், வயிற்றிலிருந்த அவரது குழந்தையும் உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து சங்கீதாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணி பெண் மற்றும் வயிற்றில் இருந்த அவரது குழந்தையும் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.