திருவாரூர் மாவட்டத்தில் நாளை 400 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்!

 
vaccine

திருவாரூர் மாவட்டத்தில் நாளை 400 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளர்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களுக்கு எந்த வித சிரமமின்றி எளிதில் அணுகக்கூடிய அளவிலும், மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயும், இந்த முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் மாவட்டத்தில், ஊராட்சி பகுதிகளில்  242 இடங்களிலும், நகராட்சியில் 40 இடங்களிலும், பேரூராட்சிகளில் 18 இடங்களிலும், 50 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 8 அரசு மருத்துவமனைகளிலும், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நடமாடும் கொரோனா தடுப்பூசிக்குழு 40 என மொத்தம் 400 இடங்களில்  தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

thiruvarur collector

மேலும், இந்த முகாம்களில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்களும், முதல் தவணை செலுத்திக்கொண்டு 2ஆம் தவணை தடுப்பூசி தகுதியேற்புநாள் கொண்டவர்களும் 2ஆம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், அனைத்து முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோய் கொண்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 6 மாதங்கள் கடந்தவர்கள், இந்த முகாமில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.