பெரம்பலூர் அருகே மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் பலி!

 
perambalur

பெரம்பலூர் அருகே தனியார் ஓட்டலில் மின்சாரம் தாக்கியதில் ஒப்பந்த பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் திருமாந்துறை பகுதியை சேர்ந்தவர் சன்னாசி. இவரது மகன் பாலா ( 23). இவர் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு டி.டி.பி.எல் நிறுவனம் ஓட்டலில் பராமரிப்பு பணியில்,  ஒப்பந்த அடிப்படையில் பாலா பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை ஓட்டலின் பின்புறம் வயரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, பாலாவின் மீது அந்த வழியாக வந்த உயர் மின்னழுத்த மின்கம்பி உரசியது.

perambalur gh

இதில் மின்சாரம் தாக்கி பாலா  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் மங்களமேடு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாவின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.