நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம் - ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி!

 
erode

ஈரோட்டில் நடிகர் சிவாஜி கணேசனின் 21-வது நினைவு தினத்தையொட்டி, அவரது உருவ படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சிவாஜி கணேசனின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஈரோட்டில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிவாஜி நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமையில், மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா மற்றும் கட்சியினர் சிவாஜி கணேசன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

erode

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், இளைஞர் காங்கிரஸ் செயலாளர் கார்த்தி, மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் அலி, பொது செயலாளர்கள் கனகராஜ், சாகுல் ஹமீது, ஆறுமுகம், டிட்டோ, மொடக்குறிச்சி செந்தில் ராஜா,  ஊடக பிரிவு முகமது அர்சத், சிறுபான்மை துறை துணை தலைவர் பாஷா, எஸ்.சி்.பிரிவு தலைவர் சின்னசாமி, ராஜாஜிபுரம் சிவா, சிந்தன் நகர் குருசாமி, 4ஆம் மண்டல தலைவர் சூர்யா சித்திக், சண்முகம், சதீஷ், மாவட்ட சேவா தள தலைவர் முகமது யூசுப், என்சிடபுல்யூசி மாவட்ட தலைவர் கிருஷ்ணவேணி, மகிளா காங்கிரஸ் பேபி, ஜெயா, நரிப்பள்ளம் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.