ஈரோட்டில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மரியாதை!

 
VOC

சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு தினத்தையொட்டி ஈரோட்டில் உள்ள அவரது உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 86-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் அவரது உருவ சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஈரோடு கருங்கல்பாளையம் ரங்கபவனத்தில் உள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு திடலில் காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆர்.கே.பிள்ளை கலந்து கொண்டு, வ.உசி. உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்களை தூவியும் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி திருச்செல்வம் தலைமை தாங்கினார்.

voc

முன்னாள் மாவட்ட தலைவர் ஈ ஆர் ராஜேந்திரன், மண்டலத் தலைவர் எச்.எம்.ஜாபர் சாதிக், முன்னாள் கவுன்சிலர் புனிதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்ட துணைத்தலவர் அம்மன் மாதேஷ், பொது செயலாளர் கனகராஜன், மாநகர் மாவட்ட  ஊடக பிரிவு தலைவர் முகமது அர்சத், சிறுபான்மை துறை தலைவர் சூர்யா சித்திக் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு, வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.