கேரளாவில் இன்று முழு அடைப்பு... கோவையிலிருந்து கேரளா செல்லும் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

 
ukkadam

கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் காரணமாக கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். 

நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா கட்சி அலுவலகங்களில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கேரளாவில் 8 பேர் உள்பட நாடு முழுவதும் 19 கட்சி நிர்வாகிகளை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி நிர்வாகிகள் கைதை கண்டித்து கேரளாவில இன்று எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று கேரளா மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

ukkadam

இதன் காரணமாக கேரளாவில் பேருந்து சேவைகள் இயங்காததால், அங்கிருந்து கோவைக்கும், கோவையில் இருந்து கேரள மாநிலத்திற்கு பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால் கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் கேரளா செல்வதற்காக காத்திருந்த பணிகள் அவதிக்கு உள்ளாகினர். மேலும், வாளையாறு எல்லையில் காலையிலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகள் தவிப்புக்குள்ளாகினர். இதன் காரணமாக கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு, கொல்லம், திருச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பொள்ளாச்சி வரை இயக்கப்பட்டு வருகின்றன.