தருமபுரியில் முன்னாள் படைவீரர்களுக்கு ரு.15 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்!

 
dd

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் 7 பேருக்கு ரு.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் திவ்யதர்ஷினி வழங்கினார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திவல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர் கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த முகாமில் மொத்தம் 22 மனுக்கள் பெறப்பட்டன. இதனை தொடர்ந்து, முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 7 முன்னாள் படைவீரர்களுக்கு ரு.15.24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் திவ்யதர்ஷினி வழங்கினார். 

dharmapuri

அதன்படி, 2016ஆம் ஆண்டு சத்திஷ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பத்தில் காலினை இழந்த அருரை சேர்ந்த முன்னாள் சிஆர்பிஎப்  வீரர் பச்சியப்பனுக்கு, தமிழக அரசால் வழங்கப்படும் அரசின் கருணைத்தொகை ரு.15 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கான தொகுப்பு நிதியிலிருந்து முன்னாள் படைவீரர் ஜெய்கணேஷின் மகள் சுஷ்மாவின் படிப்பிற்கு ரு.10 ஆயிரம் கல்வி உதவித் தொகை, தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நிதியில் இருந்து 5 முன்னாள் படைவீரர்களுக்கு ரு.14,600 மதிப்பிலான கண்காண்ணாடி நிதியுதவியும் வழங்கப்பட்டது.

இந்தக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் வெங்கடேஷ்குமார்,  தொடர்புடை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள்  மற்றும் சார்ந்தோர் கலந்து கொண்டனர்.