மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய திருவாரூர் ஆட்சியர்!

 
tvr

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.01 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 185 மனுக்கள் ஆட்சியரிடம் வழங்கினார். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

tvr

தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் ஆவின் விற்பனை நிலையம் அமைப்பதற்கான  ஆணைகளும், ஒரு நபருக்கு இலவச பேருந்து பயண சலுகை அட்டையும் வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியரது முகநுல் வழியாக பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.1,080 மதிப்பிலான ஊன்றுகோலையும் ஆக மொத்தம் 1.01 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.