பொம்மம்பட்டியில் புதிய கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்த ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்!

 
namakkal

நாமக்கல் மாவட்டம் பொம்மம்பட்டியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தகத்தை, ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், முசிறி - பள்ளிப்பட்டியில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமினை, மாவட்ட ஆட்சியர்  ஸ்ரேயா பி சிங் நேற்று தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், தீவன அபிவிருத்தி கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும்,  கால்நடைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இம்முகாமில் சிறந்த கன்றுகளுக்கு பரிசுகளும், பராமரிப்பு மற்றும் சிறந்த கால்நடைகள் வளர்ப்பு மேலாண்மைக்கான பரிசுகளை ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கினார்.

veterinary

இதனை தொடிடர்ந்து, பொம்மம்பட்டியில் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தகத்தை, மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் திறந்துவைத்தார். பின்னர் ஆட்சியர் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது, பொம்மம்பட்டியில் கால்நடை வளர்ப்போர் ஏர்ணாபுரம் கால்நடை மருந்தகத்திற்கு சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தது. தற்போது பொம்மம்பட்டியிலேயே கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்ததற்கு முதல்வருக்கும், ஆட்சியருக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துக் கொணடனர்.