தருமபுரியில் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.5 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர் சாந்தி!

 
dd

தருமபுரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.5 லட்சம் மத்திபிலான சக்கர நாற்காலிகள் மற்றும் காற்று படுக்கைகளை ஆட்சியர் சாந்தி வழங்கினார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரியும், பட்ட மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் ஓய்வூதியத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 436 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள்  அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

dd

இதனை தொடர்ந்து, வருவாய் துறை சார்பில் காரிமங்கலம் மற்றும் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட 23 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும்,  மாவட்ட ஆட்சியர் அவர்களின் விருப்ப நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு சக்கர நாற்காலிகளும் மற்றும் காற்று படுக்கைகளையும் ஆட்சியர் சாந்தி வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாந்தி, பழங்குடியினர் நல மாவட்ட அலுவலர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.