காஞ்சிபுரத்தில் 33 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய ஆட்சியர் ஆர்த்தி!

 
kanchi

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 33 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.  

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினர். இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 261 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

kanchipuram collector

தொடர்ந்து வருவாய் துறை சார்பில் காஞ்சிபுரம் வட்டம் பந்தலுர் மண்டலம் சிங்காடிவாக்கம் கிராமத்தில் 26 நபர்களுக்கும், ஸ்ரீபெருமந்துர் வட்டம் பென்னலுர் கிராமத்தில் 7 நபர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.