கோவையில் மோப்ப நாய் டயானா உயிரிழப்பு... போலீசார் மரியாதையுடன் உடல் அடக்கம்!

 
sniffer dog sniffer dog

கோவை மாநகர காவல் துறையில் பணிபுரிந்து வந்த மோப்ப நாய் டயானா உடல்நல குறைவினால் நேற்று உயிரிழந்த நிலையில், போலீசாரின் மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கோவை மாநகர காவல் துறையின் கீழ் செயல்படுமு துப்பறியும் மோப்ப நாய் படையில், கடந்த 2017ஆம் ஆண்டு டயானா என்ற பெண் மோப்ப நாய் இணைக்கப்பட்டது. வெடிகுண்டுகளை கண்டறிவது, போதை பொருட்களை கண்டறிவது, கொள்ளை சம்பவங்களில் குற்றவாளிகளை அடையாளம் காணுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்த டயானா கடந்த ஜனவரி மாதம் வரை மோப்ப நாய் பிரிவில் பணிபுரிந்து வந்தது.

sniffer dog

இதனிடையே, மோப்ப நாய் டயானாவிற்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சென்னை அரசு கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது. சிகிச்சை முடிந்து சமீபத்தில் பணிக்கு திரும்பிய மோப்ப நாய் டயானா நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. இதனை தொடர்ந்து, போலீசாரின் மரியாதையுடன் மோப்ப நாய் டயானாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.