கோவை மாவட்ட பாஜக தலைவர் கைது - வானதி சீனிவாசன் கண்டனம்!

 
Vanathi seenivasan

கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி  கைது செய்யப்பட்டதற்கு, கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டம் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆ.ராசா சமூக நல்லலிணக்கத்தை சீர்குலைக்கும்  வகையில் பேசியது இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், அவர் எம்பியாக உள்ள நீலகிரி தொகுதியில் இந்து முன்னணி அழைப்பு விடுத்த முழு அடைப்பு போராட்டம் வெற்றிபெற்றதால் விரக்தியில் பாலாஜி உத்தமராமசாமியை திமுக அரசு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Image

ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காமல், அதற்கு எதிர்வினையாற்றிய பாஜக மாவட்ட தலைவரை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என கூறியுள்ள வானதி சீனிவாசன், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்கருத்து சொன்னாலே கைது செய்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும் பாலாஜி உத்தம ராமசாமியை உடனடியாக விடுதலை செய்து, அவர் மீதான பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்திய அவர், திமுக அரசை எதிர்த்து பாஜக தொடர்ந்து போராடும் எனறும் தெரிவித்துள்ளார்.