ஈரோட்டில் பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி சமகவினர் ஆர்ப்பாட்டம்!

 
smk

ஈரோட்டில் பெட்ரோல் - டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல்,  டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்தி குறைத்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, ஈரோட்டில் சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு மண்டல வடக்கு கிளை சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு காளைமாடு சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் சின்னச்சாமி முன்னிலை வகித்தார். கொங்கு மண்டல தலைமை நிலைய செயலாளர் பொன்முத்து தலைமை தாங்கினார்.

smk

 இதில், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல் விலைஉயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் குருநாதன், மேற்கு மாவட்ட செயலாளர் சண்முகம், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் சால்ட் பாலு, நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளர் வினோத், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் குட்டி (எ) ஜனகராஜ், கரூர் மாவட்டச் செயலாளர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.