சேலத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் துவக்கம்... மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர் பொன்முடி!

 
ponmudi

சேலம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவுத்திட்டத்தை துவங்கி வைத்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பின்னர் மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் ஏழை குழந்தைகளின் படிப்பை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று மதுரையில் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இன்று மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் இத்திட்டத்தை துவங்கி வைத்தனர். இதன் படி, சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக, சேலம் மாநகராட்சியில் உள்ள 54 அரசு பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

ponmudi

சேலம் மணக்காடு மாநகராட்சி துவக்கப் பள்ளியில் இன்று நடைபெற்ற விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்எல்ஏ-க்கள் ராஜேந்திரன், அருள்,  துணை மேயர் சாரதாதேவி, மாநகராட்சி ஆணையர்  கிறிஸ்துராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுடன் காலை  சிற்றண்டியை சாப்பிட்டனர். இத்திட்டம் மூலம்  5 ஆயிரத்து 719 மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர்.