கோவை வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி... கிராண்ட் மாஸ்டரிடம் ஜோதியை வழங்கிய அமைச்சர்கள்!

 
cbe

சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவங்க உள்ள நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஜோதி நேற்று கோவை வந்தடைந்தது.

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி, ஒலிம்பிக் ஜோதி நேற்று கோவை கொண்டுவரப்பட்டது. கொடியா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ராமச்சந்திரன், முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர், ஒலிம்பிக் ஜோதியை  கிராண்ட் மாஸ்டரிடம் வழங்கினர்.  இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டு துறைகளில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டு சாதனை புரிந்த வீரர் வீராங்கனைகள் கவுரவிக்கப்பட்டனர்.

chess

தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற அதிவிரைவு  செஸ்போட்டியில் 10 மாணவர்களுடன், கிராண்ட் மாஸ்டர் சியாம் சுந்தர் செஸ் விளையாடினார். அப்போது, செஸ் கேக் வெட்டப்பட்டது. தொடர்ந்து, 16 மாவட்ட பிரதிநிதிகளிடம் மாதிரி ஜோதிகள் வழங்கப்பட்டது.

cbe

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும், செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதல்வர் மேற்கொண்டுள்ள முயற்சி குறித்தும் தெரிவித்தனர். இதனிடையே நிகழ்ச்சிக்கு வந்த கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறித்து பேசவில்லை என்றும், அவரது பெயரை பயன்படுத்தவும் இல்லை என கூறி நிகழ்ச்சியை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது,