அரியலூரில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி... ஆட்சியர் ரமண சரஸ்வதி துவங்கிவைத்தார்!

 
ariyalur

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, அரியலூரில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

சென்னை மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக நேற்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது.

ariyalur

இதில், மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய மாரத்தான் போட்டி அண்ணாசிலை, சத்திரம், தேரடி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நிறைவடைந்தது.