அரியலூரில் மத்திய அரசு, எஸ்பிஐ வங்கி பணிகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு செப்.26-ல் தொடக்கம்!

 
collector ariyalur

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய அரசு மற்றும் பாரத ஸ்டேட் வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் திங்கட்கிழமை தொடங்க உள்ளதாக ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்      

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ள 20,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 26ஆம் தேதி திங்கட்கிழமை முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளன.

20,000 பணியிடங்கள்..  SSC  வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..

மேலும், இவ்விலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் (Passport size Photo), ஆதார் அட்டை நகல் மற்றும் சுய விவரக்குறிப்புகளுடன்  (Bio DATA) அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், https://ssc.nic.in (அல்லது) www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ள அறிவுரைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.TNPSC TNUSRB, IBPS, SSC, RRB & UPSC போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள், காணொலிகள் ஆகியவை https://tamilnaducareerservices.tn.gov.in இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.