ஈரோட்டில் காணாமல் போன ரூ.9 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு!

 
erode

ஈரோடு மாவட்டத்தில் திருட்டு மற்றும் காணாமல் போன ரூ.9.45 லட்சம் மதிப்பிலான 66 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற செல்போன் திருட்டு மற்றும் காணாமல் போனது தொடர்பாக பொதுமக்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். புகார்களின் மீது மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர். போலீசார் செல்போன்களை அவற்றின் ஐஎம்இஐ நம்பரை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான 66 செல்போன்களை மீட்டனர்.

erode

தொடர்ந்து, நேற்று ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்பி சசிமோகன் செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மேலும், செல்போன் திருட்டு மற்றும் இணைய வழி மோசடி தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய அவர், இது தொடர்பாக உடனடியாக போலீசில் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.