குமரி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 2 பெண்கள் பலி, 4 பேர் படுகாயம்!

 
ngl

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் நெல்லை காய்கறி மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார்.  இவரது மகள் உமா, சுசீந்திரம் அருகே உள்ள காக்கமூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த ஆண்டு, தலைப் பொங்கல் என்பதால் மகளுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக, பாலசுப்பிரமணியன் நேற்று பூதப்பாண்டியில் இருந்து தனது மனைவி சுபா, உறவினர்கள் பிரேமா, நீளம்மாள், மற்றொரு பிரேமா ஆகியோருடன் காக்கமூருக்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். காரை அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த சிவசங்கர் என்பவர் ஓட்டிச்சென்றார்.

kumari gh

பூதப்பாண்டி - தாழக்குடி சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் சாலையோரம் இருந்த வாழைத்தோட்டத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் உமா, உலகம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஓட்டுநர் சிவசங்கர, பாலசுப்பிரமணி மனைவி சுபா உள்ளிட்ட 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பூதப்பாண்டி போலீசார், பலியான இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.