குமரி அருகே பைக் மீது கார் மோதி விபத்து... சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

 
cctv

கன்னியாகுமரி அருகே முருகன்குன்றம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இளைஞர் பலத்த காயமடைந்த நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பெரியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய்(25). இவர் நேற்று கன்னியாகுமரிக்கு சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் அகஸ்தீஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். முருகன்குன்றம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுவிட்டு நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த முருகன் என்பவரது கார் எதிர்பாராத விதமாக விஜய்யின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் வாகனத்துடன் தூக்கிவிசப்பட்ட விஜய் பல அடி தொலைவில் விழுந்தார். மேலும், அவர் மீது மோதிய காரும் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழந்தது.

accident

இந்த விபத்தில் விஜயின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. முருகன் காயமின்றி உயிர் தப்பினார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் விஜயை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.