ஆம்பூர் அருகே கோவில் சுவர் மீது கார் மோதல்; பெண் பலி, 5 பேர் படுகாயம்!

 
ambur

ஆம்பூர் அருகே சாலையோர கோவில் சுவர் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில், சென்னையை சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை எழும்பூரை சேர்ந்தவர் ஷாம். உணவ உரிமையாளரான இவர், தனது குடும்பத்தினருடன் காரில் பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வீரக்கோவில் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, ஆட்டோ ஒன்று திடீரென சாலையை கடக்க முயன்றது. இதனால் ஆட்டோ மீது மோதாமலிருக்க ஓட்டுநர், காரை திருப்ப முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள கோவில் சுவர் மீது மோதி கவிழ்ந்தது.

ambur

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த  மாலதி(57) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  மேலும்,  ஷாம், ஒரு பெண், 2  குழந்தைகள் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் போலீசார், உயிரிழந்த மாலதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.