பெரம்பலூர் அருகே பைக் மீது கார் மோதல் - விவசாயி பலி!

 
accident

பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (43). விவசாயி. இவர் பெரம்பலூருக்கு சென்றுவிட்டு தனது  இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். எசனை அருகே சென்றபோது வெங்கடேசன் வாகனத்தின் மீது, அந்த வழியாக சென்ற கார் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் வெங்கடேசன் பலத்த காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை, அந்த வழியாக சென்ற வாகனஓட்டிகள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

perambalur

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தம் பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வெங்கடேசனின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.