விராலிமலை அருகே லாரி மீது கார் மோதல் - பெண் பலி, 4 பேர் படுகாயம்!

 
accident

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 4 பேர் பலத்த காயமடைந்தனர். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை சேதுரெத்தினபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது கனி. இவரது மனைவி ஆயிஷா பேகம்(46). இவர் நேற்று மாலை  மகன் முகமது, மகள் சகானா பர்வீன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் காரில் விராலிமலை நோக்கி சென்றுள்ளார். விராலிமலை அருகே கோடாலிகுடி பகுதியில் சென்றபோது கார் எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில்  ஆயிஷா பேகம், அவரது மகன், மகள் உள்ளிட்ட 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

viralimalai

அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஆயிஷா பேகம் உயிரிழந்தார்.  மற்றவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.