வெடி பொருட்கள் விற்பனை செய்ய தற்காலிக உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம் - தேனி ஆட்சியர்!

 
theni collector

தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடி பொருட்கள் சில்லறை விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- எதிர்வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடவிருப்பதை முன்னிட்டு, தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை விபத்தில்லா பண்டிகையாக கொண்டாடுவதற்காக தமிழக அரசு பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு சில்லறை விற்பனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

crackers

ஆகையால், நிரந்தர உரிமம் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட சார் ஆட்சியர் /  வருவாய் கோட்டாட்சியர் மூலம் தங்கள் உரிமத்தினை புதுப்புத்துக்கொண்டு பயன்பெறுமாறும், தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை செய்ய உரிமம் பெற விரும்பும் பொதுமக்கள் / வணிகர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து இ- சேவை மையம் மற்றும் பொது சேவை மையம் (E-sevai / Common Service Centre) மூலமாக 30.09.2022-க்குள் விண்ணப்பித்து தற்காலிகமாக பட்டாசு கடை உரிமம் பெறுமாறு, தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.