கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

 
citu

கோவையில் நிலுவை ஓய்வூதிய தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அமைப்புசாரா தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

5 மாத நிலுவை ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே இன்று சிஐடியு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா சங்கங்களின்  ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டததிற்கு கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பட்டத்தில் சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம், சுமைப்பணி தொழிலாளர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள், தையல் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். 

citu

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக அரசு 5 மாத காலமாக நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 3ஆயிரம் வழங்கவும் வலியுறுத்தினர். மேலும், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் உயர்த்தப்பட்டுள்ள அனைத்து உதவி தொகைகளை போலவே கட்டுமான வாரித்திலும் உயர்த்தி தர வேண்டும் என்றும், அனைத்து நல வாரியங்களுக்கும் நிதி வரவை உருவாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து, கோரிக்கைளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.