வாணியம்பாடி நிம்மியம்பட்டில் எருது விடும் விழா - 200 காளைகள் பங்கேற்பு!

 
bulls

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நிம்மியம்பட்டு கிராமத்தில் கோவில் திருவிழாவை ஒட்டி இன்று எருது விடும் விழா நடைபெற்றது. இந்த போட்டியை ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ தேவராஜ் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. அலங்கரிக்கப்பட்ட காளைகள் பந்தய பாதையில் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து சென்றன.

bull

அப்போது, பாதையின் இருபுறமும் திரண்டு நின்ற 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போட்டியை கண்டு களித்தனர். குறைந்த நேரத்தில் பந்தய தூரத்தை அடைந்து, வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எருது விடும் விழாவை முன்னிட்டு அந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியி ஈடுபட்டிருந்தனர்