பண்ருட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் கொள்ளை!

 
robbery

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பூங்குணம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு திரும்பினார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு ரமேஷ், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் மாடியில் படுத்து துங்கியுள்ளார். மறுநாள் காலை எழுந்து சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. 

police

இதனை கண்டு அதிர்ச்சிக்குள்ளான ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 30 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரமேஷ், பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.