கம்பத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை... சுமை தூக்கும் தொழிலாளி போக்சோவில் கைது!

 
cumbum

தேனி மாவட்டம் கம்பத்தில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த  சுமை தூக்கும் தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

தேனி மாவட்டம் கம்பம் ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்தவர் செல்வேந்திரன்(42). இவர் சுமை தூக்கும் தொழிலாளி ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் செல்வேந்திரன் தனியே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், செல்வேந்திரன், தனது வீட்டின் அருகே வசிக்கும் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன், தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

cumbum

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் இதுகுறித்து, கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார், செல்வேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை உத்தமாபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.