வாழப்பாடி அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி!

 
dead

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாயி. இவரது 8 வயது மகன் ஆதிஷ். இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று விடுமுறையில் வீட்டில் இருந்த சிறுவன் ஆதிஷ், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். நேற்று மதியம் வீட்டில் இருந்த மின்விளக்கை ஆன் செய்ய முயன்றபோது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் ஆதிஷை உறவினர்கள் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

valapadi

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், சிறுவன் ஆதிஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அவரது உறவினர்கள் கதறி அழுதனர். தகவலின் பேரில் வாழப்பாடி போலீசார், சிறுவன் ஆதிஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து  புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.