சமயபுரம் கோவில் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!

 
samaya

திருச்சி மாவட்டம் சமயபுரம் கோவில் திருவிழாவுக்கு வந்த 10 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் துறையுர் அருகே உள்ள சோபனாபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்தையன். இவரது மகன் பெரியசாமி(10). இவர் அங்குள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், சமயபுரம் கோவில் சித்திரை தேர் திருவிழாவையொட்டி, நேற்று முத்தையன் குடும்பத்தினருடன் சமயபுரம் கோவிலுக்கு சென்றிருந்தார்.

drowned

அப்போது, திருவிழாவையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, பக்தர்கள் தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் மற்றும் தீச்சட்டி எடுத்துச் சென்றனர்.இதனை சிறுவன் பெரியசாமி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக பெரியசாமி குளத்தில் தவறி விழுந்தான்.  இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரரகள் குளத்தில் இறங்கி மயங்கிய நிலையில் சிறுவனை மீட்டனர்.

இதனை அடுத்து, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பெரியசாமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவில் திருவிழாவுக்கு வந்த சிறுவன் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் உறவினர்கள் மற்றும் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.