தருமபுரியில் ஜுன் 24-ல் புத்தக திருவிழா துவக்கம் - ஆட்சியர் திவ்யதர்ஷினி!

 
dd

தருமபுரி அரசுக் கலை கல்லுரி மைதானத்தில் வரும் ஜுன் 24 முதல் ஜுலை 4 வரை 11 நாட்கள் புத்தகத்திருவிழா நடைபெறும் என ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகம், தகடுர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து தருமபுரி அரசு கலைக்கல்லுரி மைதானத்தில் வரும் ஜுன் 24ஆம் தேதி தொடங்கி ஜூலை 4 வரை 11 நாட்கள் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் திவ்யர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இதில், தகடுர் புத்தக பேரவை, பாரதி புத்தகாலயம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் ஆட்சியர் திவ்யதர்ஷினி பேசியதாவது, தருமபுரி அரசுக் கலைகல்லுரி மைதானத்தில் வரும் ஜுன் 24ஆம் தேதி தொடங்கி ஜூலை 4 வரை 11 நாட்கள் மாபெரும் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதனை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் துவங்கி வைக்கிறார்.கைபேசியை விடு புத்தகத்தை எடு என்ற கருப்பொருளை மையமாக வைத்து நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் தமிழகத்தின் முன்னணி பதிப்பாளர்கள், நுல் விற்பனையாளர்கள் பங்கேற்று இலக்கியம், வரலாறு, மானுடவியல், அரசியல், சூலியல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பற்றிய புத்தகங்களும், சிறுவர்களுக்கான நுல்களும், முன்னணி எழுத்தாளர்களின் புனைவு இலக்கியங்களும், போட்டி தேர்வுகளுக்கான நுல்களையும் இடம்பெற செய்ய உள்ளனர்.

dd

நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி கடைகள் திறந்திருக்கும். நாள்தோறும் பகல் நேரத்தில், இலக்கிய அமைப்புகள் நடத்தும் கலந்துரையாடல்களும், இலக்கிய கூட்டங்களும் பநடைபெறும். அத்துடன் மாலை 6 மணி முதல் 8 மணி வரை முன்னணி எழுத்தாளர்கள், பல்துறை ஆளுமைகள், அறிவுசார் சான்றோர் ஆகியோரின் சொற்பொழிவு நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.

புத்த திருவிழாவையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லுரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டிகள், ஓவியப்போட்டிகள், கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்படும். மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகளை அழைத்து வருவதற்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், ஏடிஎஸ்பி அண்ணாமலை,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.