காமராஜர் பிறந்த நாள்; ஈரோட்டில் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கிய காங்கிரசார்!

 
cong

பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த நாளையொட்டி, ஈரோடு வீரப்பன் சத்திரம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. 

பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த நாள் இன்று தமிழகத்தில் கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு வீரப்பன் சத்திரம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழாவிற்கு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தூர் ராஜகோபால் தலைமை தாங்கினார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் கார்த்தி முன்னிலை வகித்தார். 

cong

இதில் தமிழக காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திருமகன் ஈவெரா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு நோட்டு மற்றும் புத்தகங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கேசவன், முகமது இப்ராகிம், தமிழரசன், ஜுபைர் அஹ்மத் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.