திருப்பத்தூர் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஜேசிபி ஆபரேட்டர் பலி!

 
accident

திருப்பத்தூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஜேபிசி ஆபரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் காரப்பட்டு நிலானூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன். இவரது மகன் திருப்பதி (22).  இவர் ஜேசிபி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று காணும் பொங்கலை ஒட்டி திருப்பதி, திருப்பத்தூர் அருகே உள்ள பூரிகமானிமிட்டா பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். சி.கே. ஆசிரமம் பகுதியில் வந்தபோது, திருப்பதி இருசக்கர வாகனத்தின் மீது எதிரே  திருப்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியை சேர்ந்த அருண்குமார்(22) என்பரது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

tirupattur gh

இதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு திருப்பதியை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அருண்குமாருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.