நெல்லை அருகே இளைஞர் தலை துண்டித்து படுகொலை - போலீசார் விசாரணை!

 
murder

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே இளைஞர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே குறிச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் வெள்ளையப்பன் என்கிற துரை(30). கூலி தொழிலாளியான இவர் வெளியூரில் தங்கி பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று வெள்ளையப்பன் கிராமத்திற்கு வந்திந்தார்.

murder

இந்த நிலையில், இன்று காலை அவர் கிராமத்தில் மர்மநபர்களால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்ட கிராமத்தினர் தாழையூத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி, அவரது தலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறிது தூரத்தில் அவரது தலை கிடந்தது. இதனை அடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலையான வெள்ளையப்பனுக்கு, அதே கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவருக்கும், அவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது தெரியவந்தது. இதனால் இந்த விவகாரத்தில் வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.