மின்கட்டண உயர்வை கண்டித்து கோவையில் வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

 
vanathi

மின்சார கட்டணத்தை தமிழக அரசு உயர்த்திவிட்டு, மத்திய அரசின் பழி போடுவதாக, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து பாஜக சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்துகொண்டு மின்சார கட்டண உயர்வை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த கூட்டத்தில் வானதி சீனிவாசன் பேசியதாவது:- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது, இதற்கு கள்ளக்குறிச்சி சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு ஆகும். பாஜகவினர் வன்முறையை ஆதரிப்பதில்லை, ஆனால் மக்களை வன்முறைக்கு தள்ளும் சூழலை உருவாக்கியது திமுக அரசு. தமிழகத்தில் மின்சாரத்தை பொறுத்தவரை தற்போது 100 யூனிட் இலவச திட்டத்திற்கு  கட்டுப்பாடுகள் விதித்து ஏழை, எளிய மக்கள் மாற்றுகின்றனர். மின் கட்டண உயர்வு சிறு, குறு தொழிற்சாலைகளை கடுமையாக பாதிக்கும். திமுக அரசு விலையை உயர்த்திவிட்டு மத்திய அரசின் மீது பழிபோடுகிறது. தனித் தமிழ்நாடு வேண்டும் என சொல்வதற்கு திமுகவினருக்கு தைரியம் உள்ளதா?. 

bJP

கோவையில் பாஜக வலுவாக உள்ளது. மதுபான விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என சொல்வார்களா?. பாஜகவினர் மதுபான கடைகளுக்கு எல்லாம் போக மாட்டார்கள். மதுபான விலை உயர்வுக்கு பாஜகவை காரணம் கூறமாட்டார்கள். ஏனெனில் அது மாநில அரசுக்கு லாபம். தமிழகத்தில் எதன் விலை ஏறினாலும் மோடிதான் காரணம் என திமுக பேசி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த 6 மாத காலத்தில் நல்ல அதிகாரிகளை வேலைக்கு அமர்த்தி நல்லாட்சி செய்வதாக காண்பித்தனர். ஆனால் தற்போது, கமிஷன் வாங்கி வருகின்றனர். மணல் எடுக்க அதிகாரிகளின் கையெழுத்திற்கு பதிலாக திமுகவினரே கையெழுத்திட்டு மணல் எடுத்துச் செல்கின்றனர். இதுவா நேர்மையான ஆட்சி, என அவர் கூறினார்.