ஈரோட்டில் பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி பாஜக-வினர் ரத்த தானம்!

 
blood donation

பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாளையொட்டி, ஈரோட்டில் பாஜக சார்பில் நடைபெற்ற ரத்த தான முகாமை அக்கட்சி எம்எல்ஏ சரஸ்வதி தொடங்கிவைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் விழாவையொட்டி, நேற்று நாடு முழுவதும் பாஜகவினர் கேக்வெட்டி கொண்டாடியும்,  பொதுமக்களுக்குநலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். இதன் ஒது பகுதியாக, ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் நேற்று நடைபெற்றது. இளைஞரணி மாவட்ட தலைவர் நவீன் ஏற்பாட்டில் நடந்த இந்த முகாமை, மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி தொடங்கி வைத்தார். இந்த முகாமில்  ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.

uu

இந்த முகாமில், ஈரோடு முன்னாள் எம்பி சௌந்திரம், ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக  தலைவர் செந்தில்குமார், மாவட்ட துணைத் தலைவர் குரு குணசேகரன், பொதுச்செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, வேதானந்தம், இளைஞர் அணி கார்த்திக், ஜெய் பிரதீப் , வெங்கடேஷ் விவேக்ராஜ் , ஜெகதீசன், செயற்குழு உறுப்பினர் பிரியா ராஜ் அதிரூபன், மகளிர் அணி புனிதம் ஐயப்பன், பழங்குடி அணி  சாய் வத்ஸன், ஊடகப் பிரிவு அண்ணாதுரை, பிரகாஷ், மாவட்ட செயலாளர் ராஜவேல் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்