கோவையில் கேரள லாட்டரி சீட்டு விற்பனை செய்த பாஜக நிர்வாகி கைது!

 
cbe

கோவை காந்திபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பாஜக இளைஞரணி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். 

கோவை காந்திபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக, காட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், காந்திபுரம் ராம்நகர் பகுதியில் போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு உரிய விதமாக நின்ற நபரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது, அவர் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரிகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

arrest

மேலும், அவர் சாய்பாபா காலனியை சேர்ந்த சபரி (32) என்பதும், அவர் கோவை மாவட்ட பாஜக இளைஞரணி துணை தலைவராக பொறுப்பு வகித்து வருவதும் தெரிய வந்தது. தொடர்ந்து, சபரி மீது வழக்குப்பதிந்து கைதுசெய்த காட்டூர் போலீசார்,  அவரிடமிருந்து 10 கேரளா லாட்டரி சீட்டுகள். ரூ.6,400 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.