பிரதமர் படம் அகற்றியதற்கு எதிர்ப்பு... கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்!

 
bjp

வெள்ளலூர் பேருராட்சி அலுவலகத்தில் பிரதமர் படத்தை அகற்றிய திமுகவினர் மீது நடவடிக்கை கோரி, கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேருராட்சி அலுவலகத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவினர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவை சேர்ந்த கவுன்சிலரான கனராஜ் அந்த புகைப்படத்தை அகற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவினர் வெள்ளலூர் பேருராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், வெள்ளலூர் பேருராட்சியில் பிரதமர் படத்தை அகற்றிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று பாஜக சார்பில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது. 

bjp

இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பிரதமர் படத்தை அகற்றியதற்கு எதிராகவும், கவுன்சிலர் கனகராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனை அடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.