உலக பக்கவாத தினத்தையொட்டி ஈரோடு தனியார் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி!

 
rally

ஈரோடு நந்தா பிசியொதெரபி கல்லூரி சார்பில் உலக பக்கவாத தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உலக பக்கவாத தினம் ஆண்டுதோறும் அக்.29ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஈரோடு நந்தா பிசியொதெரபி கல்லூரியின் நரம்பியல் துறை சார்பில் பக்கவாத தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பேரணிக்கு நந்தா அறக்கட்டளையின் தலைவா் சண்முகன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா பங்கேற்று, பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த பேரணியானது, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு சம்பத் நகர் சாலை வழியாக நந்தா சென்ட்ரல் பள்ளியில் நிறைவடைந்தது.

rally

இதில், நந்தா கல்லூரி நிர்வாக அதிகாரி ஆறுமுகம், செயலாளர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, முதன்மை நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கல்லூரி முதல்வர் மணிவண்ணன், மக்கள் தொடர்பு அலுவலர் பிரகாஷ், கல்லூரி மாணவ - மாணவிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியின்போது, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புகை பிடித்தல், மது அருந்துதல், துரித உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை, உடல பருமன் போன்றவற்றால் பக்கவாதம் ஏற்படுவதாகவும், முதல் அறிகுறி ஏற்பட்டவுடன் விரைவாக சிகிச்சை மேற்கொண்டால் பக்கவாத நோய் பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாதகைகளை கைகளில் ஏந்தியபடி சென்றனர்.