குளித்தலை அருகே சாலை விபத்தில் ஆயுதப்படை காவலர் பலி!

 
nangavaram

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஆயுதப்படை காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நங்கவரம் தமிழ்ச்சோலை தெற்குபட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ராகவன்(29). இவர் திருச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து தனது இருசக்கர வாகனத்தில் ராகவன் நெய்தலுர் சாலை வழியாக நங்கவரத்துக்கு திரும்பி கொண்டிருந்தார். நங்கவரம் வாரிக்கரை பகுதியில் சென்றபோது ராகவன் இருசக்கர வாகனமும், எதிரே பொய்யாமணியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுப்பிரமணியன் என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

trichy gh

இதில் காவலர் ராகவன் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ராகவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, நேற்று காவலர் ராகவனின் உடல் அவரது சொந்த ஊரில் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.  இறுதிச்சடங்கில் திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார் கலந்துகொண்டு, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.