தனியார் உர விற்பனை கடைகளுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

 
ariyalur

அரியலூர் மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ, பதுக்கி வைத்தாலோ கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பா அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் தனியார் உர விற்பனை கடைகளில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி அரியலுர் நகரில் உள்ள உரக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, இருப்பு பதிவேடு மற்றும் முறையாக பராமரிக்காத பில் இன்றி உர விற்பனை செய்தது போன்ற காரணங்களுக்காக தற்காலிகமாக கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார். 

மேலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால், வேளாண்மை உதவி இயக்குநர் (த.க) 9487073705, அரியலூர் வேளாண்மை உதவி இயக்குநர் 9443180884, செந்துறை வேளாண்மை உதவி இயக்குநர் 9884632588, திருமானுர் வேளாண்மை உதவி இயக்குநர் 8072890022, ஜெயங்கொண்டம் வேளாண்மை உதவி இயக்குநர் 9750890874, ஆண்டிமடம் வேளாண்மை உதவி இயக்குநர் 9486164271, தா.பழுர் வேளாண்மை உதவி இயக்குநர் 8248928648 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம்.

fertilizer shop

மேலும் வட்டார அளவில் அரியலூர், உர ஆய்வாளர் 7502821228, செந்துறை, உர ஆய்வாளர் 9884632588, திருமானுர், உர ஆய்வாளர் 7010178765, ஜெயங்கொண்டம் உர ஆய்வாளர் 7200233393, ஆண்டிமடம் உர ஆய்வாளர் 9943648446, தா.பழுர் உர ஆய்வாளர் 9626650287 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

மேலும், உர விற்பனையாளர்கள் உரங்களை விற்பனை முறை கருவி மூலம் விற்பனை செய்ய வேண்டும் அதே சமயம் விவசாயிகள் விற்பனை முறை கருவி மூலம் உரம் பெற கண்டிப்பாக ஆதார் எண் கொண்டுவர வேண்டும். உரங்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ, பதுக்கினாலோ அல்லது மற்ற இடுபொருட்களை சேர்த்து வற்புறுத்தி விற்பனை செய்தாலோ, மொத்த மற்றும் சில்லறை உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.