ஆரல்வாய்மொழி இஎஸ்ஐ மருத்துவமனையில் ஊழியர் படுகொலை - கள்ளக்காதலி கைது!

 
murder

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் இஎஸ்ஐ மருத்துமனையில் ஊழியரை கத்தியால் குத்திக்கொன்ற கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராம்தாஸ். இவரது மகன் ரதீஷ்குமார்(36). இவர் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், ரதீஷ்குமாருக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதே மருத்துவமனையில் பணிபுரியும் மணவாளகுறிச்சி பகுதியை சேர்ந்த மேக்சன் என்பவரது மனைவி ஷீபா(38) உடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனால் ரதீஷ்குமாரை திருமணம் செய்ய முடிவெடுத்த ஷீபா, தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார். இந்த நிலையில், ரதிஷ்குமார் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், ஷீபாவுடன் பழகுவதை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.

dead body

இதனால் ஆத்திரமடைந்த ஷீபா, நேற்று மருத்துவமனையில் பணியில் இருந்த ரதீஷ்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த ஆரல்வாய்மொழி போலீசார்,  ரதீஷ்குமாரின் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ஷீபாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் மருத்துவமனை ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.