பகுதி சுகாதார செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - காஞ்சிபுரம் ஆட்சியர்!

 
vinayagar chaturthi - Kanchipuram Collector Aarthi

காஞ்சிபுரத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக பகுதி சுகாதார செவிலியர், நகர்புற சுகாதார மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக பகுதி சுகாதார செவிலியர் (SNH), நகர்புற சுகாதார மேலாளர், (UHM)-2 மற்றும் கணினி மேலாளர் / தரவு மேலாளர் ( SYSTEM MANAGER / DATA MANAGER) ஆகிய பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய அறிவிப்பு மற்றும்

nurse

இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவமானது https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் 18.11.2022 அன்று மாலை 5 மணிக்குள், நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம்  / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், காஞ்சிபுரம் அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல்  மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.