காஞ்சிபுரத்தில் ஒப்பந்த செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
nurse

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக 26 ஒப்பந்த செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த செவிலியர் Staff Nurse (GH/PHC/HWC/UHWC) & MLHP (HWC) ஆகிய 26 பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு (Notification) மற்றும் இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் https://kancheepuram.nic.in எனற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் 28.01.2023 அன்று மாலை 5 மணிக்குள்,

jobs

நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் (District Health Society) காஞ்சிபுரம் மாவட்டம் - 631 501. தொலைபேசி எண். 044 - 27222019 அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, என ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.