திருப்பத்தூரில் சிறப்பு கோவில் பாதுகாப்பு காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
jobs

திருப்பத்தூர் மாவட்ட திருக்கோவில்களில் காலியாக உள்ள 24  சிறப்பு கோவில் பாதுகாப்பு காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், திருப்பத்தூர் மாவட்ட திருக்கோவில்களில் சிறப்பு கோவில் பாதுகாப்பு காவலர் பணிக்கு (Temple Protection Force) மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமுள்ள 62 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற காவலர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களிடம் இருந்து வேலை கோரும் மனுக்கள் வரவேற்கப்படுகின்றன.

Image

ஓய்வுபெற்ற காவலர்கள் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் துணை இயக்குநர், முன்னாள் படைவீரர்கள் நலன், வேலூர், வழியாகவும் மனுக்களை 27-01-2023க்கு முன்னர் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் கிடைக்கும்படியாக அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த பணியில் அமர்த்தப்படுபவர்களுக்கு ஊதியம் ரூபாய் 8,500/- வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும், இது தொடர்பான சந்தேகங்களுக்கு 9442992526 என்ற வாட்ஸ் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.