நாமக்கல் மாவட்டத்தில் 208 தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு!

 
collector namakkal

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 208 தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றையில் கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில்  முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 25.01.2023 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

1. பதவியின் பெயர் - செவிலியர், பதவியிடங்களின் எண்ணிக்கை - 208, வயது வரம்பு - 50 வயது வரை, கல்வித் தகுதி - செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing).

2.பதவியின் பெயர் - இடைநிலை சுகாதாரா பணியாளர்(Midlevel Healthcare Provider), பதவியிடங்களின் எண்ணிக்கை - 2, வயது வரம்பு - 50 வயது வரை, கல்வித் தகுதி -  இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்.

nurse

3. பதவியின் பெயர் - தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator), பதவியிடங்களின் எண்ணிக்கை - 1, வயது வரம்பு - 35 வயது வரை, கல்வித் தகுதி -  இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் குறைந்தபட்சம் 1 வருட கணினி வழி தேர்ச்சி ( Graduate with at least 1 year diploma in Computer Applications & Tally)

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி-  செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல், நாமக்கல் மாவட்டம் - 637 003.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்ட மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்திற்கு 25.01.2023 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், காலிப்பணியிடங்கள் மாறுதலுக்குட்பட்டது, என ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தெரிவித்துள்ளார்.